காலாவதியான பால் பவுடரை அனுப்பிய பிரபல நிறுவனம்: கனேடியர்கள் புகார்!

Report Print Balamanuvelan in கனடா

அமேசான் நிறுவனம், ஒன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு காலாவதியான பால் பவுடர், சாலட் உடன் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள், தேங்காய்ப்பால் ஆகியவற்றை அனுப்பியுள்ளதாக கனேடிய வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவிலுள்ள Richmond Hillஇல் வாழும் Lana Lukyanava என்பவர், தனது குழந்தைக்காக பால் பவுடர் ஆர்டர் செய்தபோது அனுப்பப்பட்ட பால் பவுடர், காலாவதி திகதி முடிந்த பால் பவுடர் என்று தெரிவிக்கிறார்.

கால்கரியைச் சேர்ந்த Andreea Catana, தான் ஆர்டர் செய்த பிஸ்கட்டை காலாவதி திகதியை கவனிக்காமலே பிரித்து சாப்பிட்டுவிட்டதாகவும், அது நமத்துப்போயிருப்பது தெரியவந்தபின்தான் காலாவதி திகதி முடிந்துபோயிருப்பதைக் கவனித்ததாகவும் தெரிவிக்கிறார்.

Joe Fiorino/CBC

உணவுப்பொருட்களைப் பொருத்தவரை வாடிக்கையாளர்கள், தாங்கள் அவறை ஆர்டர் செய்யும்போது, அவற்றின் காலவதி திகதியை பார்க்க இயலாது.

அமேசான் நிறுவனம்தான் அதை கவனித்து பொருட்களை டெலிவரி செய்யவேண்டும். மக்களுக்கு நல்ல தரமான உணவு போய்ச் சேருகிறது என்பதை உறுதி செய்வது நிறுவனங்களின் கடமை என்கிறார் நுண்ணுயிரியலாளரான Keith Warriner.

இப்படி ஒரு உணவை நீங்கள் குழந்தைக்கு கொடுத்தால், குழந்தைக்கு கிடைக்கவேண்டிய சத்து அதற்கு கிடைக்காது என்கிறார் அவர்.

Amazon.ca

கிட்டத்தட்ட அமேசான் அனுப்பும் பொருட்கள் எல்லாமே, அதன் சேமிப்பகங்களிலிருந்துதான் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இப்படி சில பிரச்னைகள் தொழில்நுட்ப காரணங்களால் நிகழ்ந்துவிடுவதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளதோடு, அதற்கு மேல் விளக்கமளிக்கவில்லை.

CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்