கனடாவில் அகதி ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானார்!

Report Print Balamanuvelan in கனடா
780Shares

கனடாவுக்கு அகதியாக வந்த ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியிருக்கிறார். 1980ஆம் ஆண்டில், வியட்நாமிலிருந்து போருக்கு தப்பி கனடாவுக்கு படகு ஒன்றில் வந்தவர் Tai Trinh (63).

அதிகமாக புன்னகைக்காத Tai Trinhக்கு 65 மில்லியன் டொலர்கள் லொட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது.

ஆல்பர்ட்டா வரலாற்றிலேயே மிகப் பெரிய தொகையை வென்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையை வென்றிருக்கிறீர்களே, அடுத்த திட்டம் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை, இப்போதைக்கு பெரிய திட்டம் ஒன்றுமில்லை, சாதாரண வாழ்வை தொடர வேண்டியதுதான் என்கிறார் மிகச்சிறிய புன்னகையுடன் கமெராவுக்கு போஸ் கொடுத்தவாறே.

Jim Wells/Postmedia

லொட்டரியில் பரிசு பெறும் பலர், பாதுகாப்பு, பயம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கள் முகத்தைக்கூட சரியாகக் காட்டுவதில்லை.

Tai Trinhம் அதற்கு விதிவிலக்கில்லை போலும், போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், தனது குடும்பத்தைக் குறித்து எதுவும் கூறவில்லை அவர்.

ஆனால் அக்கம்பக்கத்தவர்கள், அவர் வேலை எதுவும் செய்யவில்லை என்றும், மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி இறந்துபோனார் என்றும் கூறுகிறார்கள்.

அவருக்கு பிள்ளைகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தாலும், அவர்களைக் குறித்து கேட்டால், அது எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்கிறார்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்