கனடாவில் குடிநீரில் அளவுக்கதிகமான ரசாயனம் கண்டுபிடிப்பு: ஒரு அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குடிநீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அளவுக்கதிகமான ரசாயனம் ஒன்று கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முக்கிய கனேடிய நகரங்களிலுள்ள பல லட்சம் வீடுகளில் காரீயம் (Lead) எனப்படும் ஒரு ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Flint என்ற இடத்தில் 2015ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டபோது, இதேபோன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது கனடாவில் ஏற்பட்டுள்ள பிரச்னை அதேபோன்ற ஒன்று என கருதப்படுகிறது. 2014க்கும் 2018க்கும் இடையில் 12,000 இடங்களில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் மூன்றில் ஒரு பங்கு மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு காரீயம் உள்ளது (அனுமதிக்கப்பட்ட அளவு 5 parts per billion (ppb).

காரீயக்கலப்பு குழந்தைகளுக்கு குறைந்த IQ வை ஏற்படுத்தும், அத்துடன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது காரீயம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்கு தண்ணீரைக் கொண்டு வரும் குழாய்களிலிருந்து இந்த காரீயம் தண்ணீரில் கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவல் வெளியானதும் கியூபெக் மற்றும் மொன்றியல் மாகாண தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்