23 வயதில் விதவையான இளம்பெண்! கணவர் தன்னுடன் இருப்பதாக நினைத்து செய்யும் செயல்.. நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த விதவை பெண் கணவர் விபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில் வருடா வருடம் திருமண நாளின் போது கணவர் தன்னுடன் இருப்பதாக உணரும் வகையில் அவர் செய்து வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Saskatchewan-ஐ சேர்ந்தவர் எரிக். இவரும் வனீஷா (29) என்ற பெண்ணும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இரண்டு வருடங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய அடுத்த இரண்டு மாதத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பரில் எரிக் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Kurtis Isbister/SWNS

கணவர் இறந்ததால் 23 வயதில் விதவையான வனீஷா, எரிக்கின் நினைவுகளை தன்னுடன் எப்போதும் வைத்திருந்த அவர் விரும்பினார்.

அதன்படி வருடா வருடம் தனது திருமண நாளில், மணக்கோலத்தில் உடுத்தியிருந்த உடையில் புகைப்படங்கள் எடுத்து கணவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்.

வனீஷாவின் காதலர் குர்தீஷ் தான் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இதுகுறித்து வனீஷா கூறுகையில், எரிக்கின் நினைவுகளை எப்போதும் வைத்திருக்க இது போன்ற செயலை நான் திருமண நாளில் செய்கிறேன்.

Becky Morrison/SWNS

பொதுவாக திருமண நாளில் தம்பதியாக எல்லோரும் வெளியிடங்களுக்கு செல்வார்கள், ஆனால் என் கணவர் என்னுடன் இல்லாததால் நான் இப்படி செய்கிறேன்.

நான் பரிதாபமான நிலையில் இருக்கக்கூடாது, எப்போது மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றே எரிக் விரும்பினார்.

இறுதிவரை வருடா வருடம் திருமண நாளில் இது போல புகைப்படங்களை எடுத்து அவருக்கு மரியாதை செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Kurtis Isbister/ SWNS
Vanessa Lanktree/SWNS

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்