மின்சாரம் தாக்கியதால் கைகளையும் கால்களையும் இழந்த பெண்: அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்!

Report Print Balamanuvelan in கனடா

2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன் கொடிய விபத்தொன்றில் சிக்கி கைகளையும் கால்களையும் இழந்த கனேடிய பெண் ஒருவர், அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

Gatineauவைச் சேர்ந்த சப்ரினா என்ற இளம்பெண், கடுமையான புயல் மழைக்கு நடுவில், தனது தாயை சந்தித்துவிட்டு வீடு திரும்பும்போது, அவரது கார் மீது மின் கம்பம் ஒன்று சாய்ந்தது.

அதிலிருந்து தப்பி, காரை விட்டு வெளியேறிய சப்ரினா மின்சார ஒயரை மிதிக்க, அவர் உடலில் பாய்ந்த மின்சாரம் அவரது உடலை கடுமையாக தாக்கியது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சப்ரினாவின் கைகளும் கால்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவர்கள் சப்ரினாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரது இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் அகற்றவேண்டியதாயிற்று.

msn

அதைத் தொடர்ந்து மொன்றியலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சப்ரினா.

சோகத்தின் மத்தியில் இருந்தபோது, அதே மறுவாழ்வு மையத்தில் தனது காதலரை சந்தித்தார் சப்ரினா.

தற்போது அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் அவர். நீண்ட காலத்திற்குப் பிறகு, சப்ரினாவை இப்படி புன்னகையுடன் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சப்ரினாவின் தோழி ஒருவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்