டொரண்டோவில் மாயமான 15 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன்... புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன சிறுவன் மற்றும் சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 13 வயது சிறுவன் Sung Lee மற்றும் 15 வயது சிறுமி Ah Jung Lee ஆகிய இருவரும் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் கடைசியாக Nairn Avenue மற்றும் St. Clair Avenueவில் கடைசியாக காணப்பட்டனர்.

மாயமான நேரத்தில் சிறுவன் Sung Lee கருப்பு நிற டீ - சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்.

அதே போல சிறுமி Ah Jung Leeயும் கருப்பு நிற டீ - சர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

இருவரின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் அவர்கள் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்