பொலிசாரை அழைக்க மொபைல் இரவல் கேட்ட நபர்: விசாரித்ததில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தன் வீட்டு வாசலில் நின்ற ஒருவரிடம், குப்பை பொறுக்கும் நபர் ஒருவர் வந்து, உங்கள் மொபைல் போனை கொஞ்சம் இரவல் தர முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

Saskatoonஇல் வசிக்கும் Stan Bergen என்ற அந்த கட்டிட மேலாளர் அவரிடம், எதற்கு என்று கேட்க, பொலிசாரை அழைக்க என்று கூறியிருக்கிறார் அந்த நபர்.

பின்னர் அவரிடம் பேசியதில், அவர் குப்பையில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு குழந்தையின் உடலைக் கண்டதாகவும், அதை பொலிசாரிடம் தெரிவிக்கத்தான் மொபைலை இரவல் கேட்பதாகவும் கூறியுள்ளார் அந்த நபர்.

Alicia Bridges/CBC

உடனடியாக அவருடன் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த Stan, அங்கு ஒரு பிளாஸ்டிக் பையில், அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை கிடப்பதைக் கண்டுள்ளார்.

Stan பொலிசாரை அழைக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து, உடல் விரைத்துப்போயிருப்பதையும் கண்டனர்.

விசாரணையை துவக்கியுள்ள பொலிசார், இப்படி குழந்தையை வீசிய தாயும் மோசமான உடல் மற்றும் மன நிலையில் இருக்கலாம் என்பதால் அந்த குழந்தையின் தாயை தேடும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

Morgan Modjeski/CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்