கனடாவில் மாயமான 15 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன்! தந்தையே கடத்தி சென்றது அம்பலம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மாயமான சிறுமி மற்றும் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் டொரண்டோ நகரில் சுங் லீ (13) என்ற சிறுவனும் அவன் சகோதரி ஜுங் லீ (15)யும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போனார்கள்.

இருவரும் கடைசியாக Nairn Avenue மற்றும் St. Clair Avenueவில் காணப்பட்டனர்.

இருவரும் மாயமான போது கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் Amber Alert எனப்படும் சிறார்கள் கடத்தப்பட்டால் விடப்படும் எச்சரிக்கையையும் பொலிசார் விடுத்தனர்.

இந்நிலையில் சுங் லீ மற்றும் ஜுங் லீ ஆகிய இருவரையும் பொலிசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் புதிய தகவலாக இருவரையும் அவர்களின் தந்தை சுல் லீ கடத்தியதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து அவரை பொலிசார் காவலில் எடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்