டொரண்டோவில் திடீரென காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிப்பு! புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன 12 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் Kaylee Gillard (12) என்ற சிறுமி கடந்த 8ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு Queensway & Burma Dr பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்த பொலிசார் Kaylee Gillard குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியிருந்தனர்.

இந்த பதிவு டுவிட்டரில் வைரலான நிலையில் சிறுமி Kaylee Gillard விரைவில் பத்திரமாக மீட்கப்பட பிரார்த்திப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் Kaylee Gillard கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்