கனடாவில் மொபைலில் அந்தரங்க வீடியோக்கள் வைத்திருந்த ஒருவரின் மொபைலை ஹேக் செய்துள்ள மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொரன்றோவைச் சேர்ந்த Randall Baran-Chongக்கு, அவரது மைக்ரோசாஃப்ட் கணக்கில் யாரோ நுழைய முயற்சி செய்வதாக எச்சரிக்கை செய்தி ஒன்று வந்தது.
அடுத்த சில மணி நேரத்திற்குள் யாரோ அவரது லாப் டாப்பை லாக் செய்திருந்தார்கள், அவரது மொபைலில் சேமித்து வைத்திருந்த தனிப்பட்ட கோப்புகளைப் பார்வையிட்டிருந்தார்கள்.
அத்துடன் முடியவில்லை, அவருக்கு வந்த இமெயில் ஒன்று, அவரது அந்தரங்க வீடியோக்களை அவரது சக ஊழியர்கள், உறவினர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்போவதாகவும், அதை தவிர்க்க வேண்டுமென்றால் சுமார் 25,000 டொலர்கள் மதிப்புள்ள இரண்டு பிட்காயின்களை அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவரை மிரட்டியது.

Baran-Chong பல ஆண்டுகளாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேமித்து வைத்திருந்தார்.
அவற்றில் அவர் பல பெண்களுடன் அந்தரங்க உறவு கொள்ளும் வீடியோக்களும் இருந்தன. அடுத்து அவருக்கு வந்த மெயிலில், அவரது மொபைலில் சேமித்து வைத்திருந்த அவரது பாஸ்போர்ட் ஸ்கேனும், அந்தரங்க வீடியோக்களின் ஸ்கிரீன் ஷாட்டும் இடம்பெற்றிருந்தன.
பொலிசாரிடம் Baran-Chong இது குறித்து புகாரளிக்க, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார்கள் என்றாலும், அது ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இப்படி புகைப்படங்களை ஹேக் செய்யும் மோசடியில் சிக்கியுள்ளது Baran-Chong மட்டுமல்ல, பல பிரபலங்களும் இதற்குமுன் சிக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
