நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் மரக்கட்டையை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த நபர்: ஒரு திகில் சம்பவம்!

Report Print Balamanuvelan in கனடா
686Shares

பயங்கர வேகத்துடன் கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே தண்ணீரில் மரக்கட்டை ஒன்றை பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்த ஒருவரை பொலிசார் மீட்ட திகில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிக்கினால் எலும்பு கூட கிடைக்காது என்று கூறும் அளவுக்கு சீறிப்பாயும் நயகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து சற்று தொலைவில், அபாயகரமாக ஒருவர்

மரக்கட்டை ஒன்றைப் பிடித்தபடி வேகமாக இழுக்கும் தண்ணீரில் தொங்கிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், இடுப்பில் கட்டிய கயிற்றுடன் தண்ணீரில் இறங்கிய பொலிசாரில் ஒருவர், அந்த 59 வயது நபரை தண்ணீருக்குள் மூழ்கிவிடாதவாறு பிடித்துக் கொள்கிறார்.

அவரால் நிச்சயம் அந்த நபரை தனியாக மீட்க முடியாது, எனவே தனது சக பொலிசாருக்காக காத்திருக்கிறார் அவர்.

பின்னர் இரண்டாவது பொலிசார் தண்ணீருக்குள் இறங்க, கரையில் நிற்பவர்கள் அவர்களை பத்திரமாக இழுத்து மீட்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.

மீட்கப்பட்ட அந்த நபர் வெகு நேரம் குளிர்ந்த நீரில் இருந்ததா, அவரால் பேசவோ, கை கால்களை அசைக்கவோ முடியவில்லை.

அவர் hypothermia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வளவு அபாயகரமான பகுதிக்கு அவர் ஏன், எப்படி சென்றார் என்பது தெரியவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்