கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! நடுவானிலேயே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Report Print Raju Raju in கனடா

சவுதி அரேபியாவில் இருந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கனடாவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

சவுதியின் ஜெட்டாவில் இருந்து செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று கிளம்பி வாஷிங்டனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானமானது கனடாவின் Newfoundland மாகாணத்தில் உள்ள செண்ட் ஜான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து குழந்தை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட போது ஏற்கனவே அது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை எதனால் உயிரிழந்தது என்ற காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில் அதன் இறப்பில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருந்த போதிலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் அது தொடர்பிலான இன்னபிற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கனடாவில் தரையிறக்கப்பட்ட விமானம் பின்னர் வாஷிங்கடனுக்கு கிளம்பி சென்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்