8வது மாடியிலிருந்து விழுந்த அந்த பொருள்!... 2 வயது சிறுமி பரிதாப மரணம்: கனடாவில் சோக சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8-வது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் ஒன்று தவறி விழுந்து 2 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்களின் கண் முன்னே நடந்த இந்த குலை நடுங்க வைக்கும் சம்பவம் ஸ்கார்பரோவில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்டுள்ளது.

திங்களன்று உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் பொலிசாருக்கு தகவல் பறந்துள்ளது. தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார்,

குற்றுயிரான நிலையில் 2 வயது சிறுமியை மீட்டுள்ளனர். உடனடியாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சுமார் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

சம்பவத்தன்று மரணமடைந்த சிறுமியின் தாயாரும் அவரது மூன்று பிள்ளைகளும் தாங்கள் வசிக்கும் ஸ்கார்பரோவில் உள்ள ரொரன்ரோ சமூக குடியிருப்பு வளாகத்திற்கு சென்றுள்ளனர்.

2 வயதேயான சிறுமி கிரிஸ்டல் மிரோகோவை ஸ்ட்ரோலரில் வைத்து கூட்டிச் சென்றுள்ளனர். அந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்பு,

8-வது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் ஒன்று தவறி சிறுமியின் ஸ்ட்ரோலர் மீது விழுந்துள்ளது.

கிரிஸ்டலின் இரு சகோதரர்கள் 5 மற்றும் 7 வயதான இருவரும் இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து வாய்விட்டு அலறியுள்ளனர்.

உடனடியாக சிறுமி கிரிஸ்டலை மருத்துவமனையில் சேர்ப்பித்தாலும், சுமார் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது சிறுமி கிஸ்டலின் இறுதிச் சடங்குகளளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலித்து வருகின்றனர். மட்டுமின்றி அந்த குடும்பத்திற்கு வேறு பகுதியில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி தரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கமெரா பதிவுகள், நேரடி பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது ஒரு சோகமான விபத்து என ரொரன்ரோ காவல்துறை அதிகாரி மந்தீப் மான் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்