சாலைக்கு வந்த காட்டுமான்! பரிதாபமாக பறிபோன சிறுவன் உயிர்... கனடாவில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலை நடுவே காட்டுமான் திடீரென வந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

Quebec மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஞாயிறு மதியம் 2 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையின் நடுவே காட்டுமான் ஒன்று வந்ததால் ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.

அந்த சமயத்தில் ஐந்து பேருடன் வந்த இன்னொரு காரும் காட்டுமான் மீது மோதிய நிலையில் பின்னர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த சிறுவன் மற்றும் சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் மேலும் இருவருக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து சில மணி நேரம் குறித்த சாலை மூடப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்