மரணப் படுக்கையில் அன்று முக்கிய கோரிக்கை விடுத்த கனேடிய இளம்பெண்: இன்று உறவினரின் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in கனடா

நடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலுக்கு அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி கோரிக்கை விடுத்த இளம்பெண் மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கனடாவின் வின்னிபெக் பகுதியை சேர்ந்த 18 வயது மாடிசன் யெட்மேன் என்பவரே கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தவர்.

புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்த மாடிசன் யெட்மேன் அக்டோபர் மாதம் வெளியிட்ட காணொளி ஒன்று கனடாவில் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

புற்றுநோயால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கும் தாம் பொதுத் தேர்தலுக்காக ஏற்கெனவே வாக்களித்துவிட்டதாகவும், இந்தமுறை வாக்களிப்பதில் இருந்து தப்பிக்க நீங்கள் கூறும் காரணம் என்ன என மாடிசன் யெட்மேன் வினவியிருந்தார்.

மாடிசன் யெட்மேன் தமது காணொளியை பதிவேற்றிய ஒருமணி நேரத்திற்குள் சுமார் 47,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே மாடிசன் யெட்மேன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 6 ஆம் திகதி குடும்பத்தினருடன் உணவருந்த வெளியே சென்ற நிலையில், திடீரென்று சுகவீனமடைந்த மாடிசன் யெட்மேனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதித்த மருத்துவர்கள், மாடிசன் யெட்மேன் புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் உயிருடன் இருக்கவே வாய்ப்பு எனவும் நாள் குறித்துள்ளனர்.

கனடாவில் தேர்தல் வாக்குப்பதிவு மூம்முரமாக நடந்துவந்த நிலையில், தமது முதல் வாக்கை பதிவு செய்ய அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வாக்களித்ததன் பின்னரே மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கனேடிய மக்களுக்கு அவர் வாக்களிக்கும்படி கோரிக்கையும் விடுத்தார்.

இந்த பொதுத் தேர்தலில் என்னால் வாக்களிக்க முடியும் என்றால் கண்டிப்பாக உங்களாலும் நேரம் ஒதுக்க முடியும் என அந்த காணொளியில் அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்