என் முன்னாள் காதலர் இப்படியெல்லாம் என்னிடம் பேசியதே இல்லை: விநோத மோசடியில் சிக்கிய பெண்!

Report Print Balamanuvelan in கனடா

அன்பே ஆருயிரே என்று அழைத்து, நீ எவ்வளவு அழகு தெரியுமா, உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா என்றேல்லாம் கேட்ட ஒன்லைன் காதலரை நம்பி பணத்தை பறிகொடுத்திருக்கிறார் ஒரு கனேடிய பெண்.

என் முன்னாள் காதலர் இப்படியெல்லாம் என்னிடம் பேசியதேயில்லை என்று கூறும் ஒட்டாவாவைச் சேர்ந்த Michelle Boyer (48), அவன் என்னிடம் பேசும்போதெல்லாம் உண்மையான ஒரு பெண்ணாக உணர்ந்தேன் என்கிறார்.

ஒன்லைனில் Billy Brown என்ற நபரை சந்தித்தார் Michelle. (அதுதான் அவரது உண்மையான பெயரா என்பதுகூட தெரியாது).

ப்ளோரிடாவைச் சேர்ந்த Billy, தன்னை அங்கு அழைத்துச் செல்வதாக பெரிய திட்டமெல்லாம் போட்டிருக்கும் நேரத்தில், திடீரென ஒரு நாள் கொஞ்சம் பணம் கேட்க, காதல் கண்ணை மறைக்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் பணம் கொடுத்திருக்கிறார் Michelle.

பின்னர் அது அவ்வப்போது தொடர்ந்தாலும், Michelleக்கு சந்தேகம் வரவில்லை. இப்படியே சுமார் 3,000 டொலர்கள் கொடுத்தபின் ஒருநாள் மேலும் கொஞ்சம் பணம் கேட்க, பென்ஷன் வாங்கி அதில் காலம் தள்ளும் Michelle, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதற்கு Billy, உன்னிடம் நகை எதுவும் இல்லையா, அதை விற்று எனக்கு கொஞ்சம் பணம் அனுப்பக்கூடாதா என்று கேட்க, அப்போதுதான் Michelleக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கனடாவைப் பொருத்தவரை அசாதாரண ஒரு கதை அல்ல.

இப்போது அன்புக்காக ஏங்கும் வயதானவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் பல சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்ற வாரம் Norfolk Countyயைச் சேர்ந்த ஒருவர், தனது இதயத்துடன் சேர்த்து சுமார் 300,000 டொலர்களையும் இந்த காதல் மோசடியில் பறிகொடுத்துள்ளார்.

தற்போது இம்மாதிரி மோசடியில் சிக்குபவர்களை தடுப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் Michelle, எனக்கு நடந்ததை எண்ணுவதற்கு எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் மக்களை எச்சரிக்க விரும்புகிறேன், ’பணம் அனுப்பாதீர்கள்’ என்கிறார்

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்