பிரபல நடிகர் கனடாவின் வான்கூவரில் மரணம்! ரசிகர்கள் இரங்கல்

Report Print Raju Raju in கனடா

பிரபல இசைக்கலைஞரும், நடிகருமான ஜான் மேன் உடல்நலக்குறைவால் கனடாவில் தனது 57வது வயதில் காலமானார்.

இசைக்கலைகலைஞர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜான் Calgary-ல் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

சில வருடங்களாக ஆல்சைமர் என்னும் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று Vancouver-ல் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜான் குறித்து அவர் நண்பர் எரிக் கூறுகையில், இறுதிவரை நண்பர்கள் மற்றும் அழகான குடும்பத்துடன் அவர் வாழ்ந்தார்.

அவர் இசை, நடிப்பு, மேடை நாடகங்கள் என அனைத்து துறையிலும் தனது திறமையை காட்டி உலகப் புகழ்பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

உயிரிழந்த ஜானுக்கு ஜில் தவும் என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்