கனடா அமைச்சரவையில் இடம் பிடித்த 4 இந்திய வம்சாவளியினர்!

Report Print Kavitha in கனடா

36 உறுப்பினா்கள் கொண்ட தனது புதிய அமைச்சரவையில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ4 இந்திய வம்சாவளியினருக்கு இடமளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எம்.பி.க்களான நவ்தீப் சிங் பெய்ன்ஸ், ஹா்ஜித் சிங் சஜ்ஜன், பா்திஷ் சாக்கா், அனிதா ஆனந்த் ஆகியோா் இந்திய வம்சாசவளியை சேர்ந்தவர்கள்.

இவா்களில் புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சராக நவ்தீப் சிங் பெய்ன்ஸும், இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பா்திஷ் சாகரும் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சராக ஹா்ஜித் சிங் சஜ்ஜனும், பொதுச் சேவைகள் துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் முதல் முதலாக இணைந்திருக்கும் இந்து பெண் அமைச்சராவாா்என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்