ரயிலுக்கு தாமதமாவதால் அவசர உதவி எண்ணை அழைத்த பெண்!

Report Print Balamanuvelan in கனடா
270Shares

அவசர உதவி எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்த ஒரு பெண், ரயிலுக்கு நேரமாகிறது என்னை சீக்கிரம் கொண்டு ரயில் நிலையத்தில் சேர்க்க முடியுமா என கேட்ட சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

911 என்பது மேலை நாடுகளில் அவசர உதவிக்காக அழைக்கும் ஒரு எண்.

அவசர உதவி என்றால், ஒருவர் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொண்டார், வீட்டில் ஒரு குற்றச்செயல் நடைபெற இருக்கிறது என்பது போன்ற விடயங்களைக் கூறி உதவிக்கு அழைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள எண்.

ஆனால், சமீபத்தில் ஒரு பெண் அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.

தான் ரொரன்றோ ரயில் நிலையம் நோக்கி ஒரு டாக்சியில் சென்று கொண்டிருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.

அவசர உதவி கால் செண்டர் ஊழியர் அவரிடம் என்ன உதவி தேவை என்று கேட்டபோது, தனக்கு தாமதமாவதாக தெரிவித்துள்ள அந்த பெண், தன்னை விரைவாக ரயில் நிலையம் கொண்டு சேர்ப்பதற்கான சேவைகள் ஏதாவது உங்களிடம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

அப்படி ஒரு சேவையும் இல்லை என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார் அவசர உதவி மைய ஊழியர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டுமே 180,000 இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கிறார் Peel பகுதி பொலிசாரான Akhil Mooken.

குடிபோதையில் அழைப்பவர்கள், குழந்தைகள், என தேவையில்லாமல் அவசர உதவியை அழைப்போரால், உண்மையிலேயே அவசர உதவிக்கு அழைப்போரின் அழைப்பை ஏற்பதில் தாமதம் ஏற்படலாம் என்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்