ரொரன்ரோவில் மாயமான 21 வயது அழகான இளம்பெண்ணின் நிலை என்ன? பொலிசார் தெரிவித்த தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மாயமான 21 வயது இளம் பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிவிப்பில் Anais Jimenez என்ற 21 வயது இளம் பெண் 23ஆம் திகதி மதியம் கடைசியாக Jane St, Falstaff Av பகுதியில் காணப்பட்டதாகவும் பின்னர் அவரை காணவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதோடு இளம்பெண் Anais Jimenez 5 அடி உயரம் கொண்டவர் எனவும் ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் Anais Jimenez அணிந்திருந்த உடையின் நிறம் மற்றும் இன்னபிற அடையாளங்கள் குறித்த தகவலை வெளியிட்ட பொலிசார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என அவரின் புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருந்தனர்.

இந்த தகவலை வெளியிட்ட நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் பொலிசார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், Anais Jimenez கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பொலிசார் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்