கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவி!

Report Print Vijay Amburore in கனடா

கனடாவின் சர்ரே கவுன்டியில் மர்மமாக கொலை செய்யப்பட்டிருந்த மாணவி இந்தியாவை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவின் சர்ரே கவுண்டியில் உள்ள வீட்டில் கடந்த 22ம் திகதியன்று ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் போல இருப்பதாகவும், அதில் ஒரு பெண் மட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தனர்.

ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தியல் என்பவர், கனடாவில் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தது தன்னுடைய மகள் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Facebook

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகள் கொலை செய்யப்பட்ட நோக்கம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து கனடா பொலிஸார் எந்த தகவலும் வழங்கவில்லை.

“எனது மகள் பிரப்லீன் மாதாரு கவுர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்குப் படிப்பதற்காக புறப்பட்டார். காலை 6 மணிக்கு பொலிஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்களிடம் ஒரு மோசமான செய்தி இருப்பதாக, என் மகள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்கள். வேறு எந்த தகவலும் அவர்கள் வழங்கவில்லை" என கூறியுள்ளார்.

Facebook

இந்த நிலையில் தங்கள் மகளுக்கு என்ன ஆனது என்பதை அறிய, மாணவியின் குடும்பத்தினர் தற்போது கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு செல்ல உள்ளனர்.

முன்னதாக 2016 ல் மாணவர் விசாவில் கனடா வந்த பிரப்லீன் வான்கூவரில் உள்ள லங்காரா கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்