கனடாவின் ஒன்ராறியோ வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த யாருமே உயிர் பிழைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உண்மையில், பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒன்ராறியோவின் கிங்ஸ்டன் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த Piper PA-32 ரக விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், அதில் பயணித்த ஒருவரும் பிழைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேற்று மாலை 6.30 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விமானம் எங்கு கிடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக ஏராளமான பொலிசார் களத்தில் இருந்ததாகவும், மரங்களும் புதர்களுமாக இருந்ததால் தேடுவது கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 மீட்புக் குழுவினருடன் ஹெலிகொப்டர் ஒன்றும் தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்பட்டது.
அந்த விமானம் எங்கிருந்து புறப்பட்டது என்றோ, எங்கு சென்று கொண்டிருந்தது என்றோ எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
