கனடாவில் உள்ள சந்தில் கிடந்த சடலம்! அது ஆணா அல்லது பெண்ணா என்பதில் குழப்பம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத சாலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆணா அல்லது பெண்ணா என்பது கூட இன்னும் தெரியாத நிலை உள்ளது.

பிரிட்டீஸ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் நகரில் உள்ள சந்தில் வெள்ளிக்கிழமை காலை சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே தொடங்கியுள்ளது.

சடலமாக கிடந்த நபரின் பாலினம், வயது மற்றும் இன்னபிற விபரங்கள் குறித்து தெரியவில்லை.

இது ஒரு குற்ற வழக்கு என்பது எங்களுக்கு தெரியும், சாதாரணமாக சாலையில் யாரும் சடலமாக இருக்க முடியாது.

இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சாட்சிகள் இருந்தாலோ பொலிசாரிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்