எஸ்கலேட்டரில் கை வைக்காமல் சென்ற பெண்ணை கைது செய்த பொலிசார்: நீதிமன்றம் அதிரடி!

Report Print Balamanuvelan in கனடா

எஸ்கலேட்டரில் செல்லும்போது பிடிக்காமல் சென்றதற்காக ஒரு பெண்ணை பொலிசார் கைது

செய்த வழக்கில், அவருக்கு இழப்பீடு வழங்க கனடா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bela Kosoian என்னும் பெண், Quebecஇலுள்ள Laval மெட்ரோ ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தி கைப்பிடியை பிடித்துக்கொண்டு செல்ல வலியுறுத்தியிருக்கிறார்.

Bela மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடையாள அட்டையைக் காட்டச் சொல்ல, அதற்கும் மறுத்துள்ளார் Bela.

உடனே அவரது பையை சோதனையிட்ட அந்த பொலிசார், அவரை கைது செய்து கைவிலங்கு மாட்டியதோடு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஒன்றிற்கு கீழ்ப்படியாத குற்றத்திற்காக 100 கனேடிய டொலர்களும், பொலிசாரின் பணிக்கு இடையூறு செய்ததற்காக 320 கனேடிய டொலர்களும் அபராதம் விதித்துள்ளார்.

thestar

தான் பொது இடத்தில் இப்படி கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்ட விடயம் தனக்கு கடும் மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியதாக வழக்கு தொடர்ந்தார் Bela. ஆனால் கீழ் நீதிமன்றங்கள் இரண்டு அவரது வழக்கை தள்ளுபடி செய்துவிட்டன. என்றாலும் மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் சென்றார் Bela.

உச்ச நீதிமன்றம், அந்த பொலிசார் நடக்காத ஒரு குற்றத்துக்காக சட்ட விரோதமாக Belaவை சோதனையிட்டதாகக் கூறி, சுதந்திரமான குடியரசு நாடு ஒன்றில் இத்தகைய அநீதியான இடையூறுகளை யாரும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று அதிரடியாக தீர்ப்பளித்தது.

அத்துடன் Belaவுக்கு 20,000 கனேடிய டொலர்கள் இழப்பீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கனேடிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்