ரொரன்ரோவில் காணாமல் போன பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஆர்யன் ஷபாசி என்ற 55 வயது பெண்ணை கடந்த 29ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என கூறப்பட்டிருந்தது.

மேலும் ஆர்யன் Mt Pleasant Rd மற்றும் Erskine Av பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக பொலிசார் அந்த பதிவில் தெரிவித்தனர்.

இதோடு ஆர்யனின் உயரம், உடல் எடை, காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்களையும் பொலிசார் வெளியிட்டனர்.

இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மாயமான ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்தனர்.

மேலும் ஆர்யனை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்