நல்ல நோக்கத்திற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை ரத்து செய்துள்ள கனேடிய குடும்பங்கள்!

Report Print Balamanuvelan in கனடா
205Shares

கனேடிய தீயணைப்பு வீரர்கள் சிலரின் குடும்பங்கள், அவுஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையையே ரத்து செய்துள்ளனர்.

கனடாவில் குளிர் எலும்பைத் துளைக்கும் அளவுக்கு இருக்கும் அதே நேரத்தில், அவுஸ்திரேலியாவிலோ இது காட்டுத்தீ ஏற்படும் நேரம்.

எனவே அவுஸ்திரேலியா கனடாவின் உதவியை நாடியிருந்தது. அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள கனடா, அவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளது.

கனடா முழுவதிலுமிருந்து, பல அனுபவம் வாய்ந்த தீயணைப்பு வீரர்கள் தங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்துவிட்டு, அவுஸ்திரேலிய காட்டுத்தீயை அணைப்பதற்காக செல்ல முன்வந்துள்ளனர்.

21 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய ஒரு குழு வான்கூவரில் கூடி அங்கிருந்து சிட்னிக்கு செல்ல உள்ளது.

அவர்கள் அவுஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்து காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளார்கள்.

அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணியான Lucas Fowler, தனது காதலியுடன் கனடாவுக்க சுற்றுப்பயணம் வந்தபோது, Manitobaவில் கனேடிய இளைஞர்கள் இருவரால் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அவுஸ்திரேலியாவுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக, அவுஸ்திரேலியா செல்லும் கனேடிய தீயணைப்பு வீரர்கள் குழுவில் Manitobaவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்