அழகான இளம்பெண் ரொரன்ரோவில் மாயம்! புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா
207Shares

கனடாவில் 21 வயதான அழகான இளம்பெண் காணாமல் போயுள்ளதாக பொலிசார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் நடாஷா கோம்ஸ் என்ற 21 வயது இளம் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடாஷா கோம்ஸ் கடைசியாக டிசம்பர் 3ஆம் திகதி கிங்ஸ்டன் சாலை மற்றும் கிளேர் மோர் பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

அவர் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் என தெரிவித்துள்ள பொலிசார் பழுப்பு நிறத்திலான கண்களை அவர் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதோடு காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகளின் நிறம் மற்றும் அது தொடர்பிலான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இது குறித்து உதவ கோரப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்