கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் இளைஞர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி பஞ்சாப் இளைஞர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலை தொடர்பாக புதிய தகவல் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Abbotsford பகுதியில் Jagvir Malhi (19) என்ற இளைஞர் ஒரு கூட்டத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அப்போது அவர் கேங் ஏதோ ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும், அதனால் அவர் எதிரி கேங் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்போதே அவரது நண்பர்கள் Malhi அப்படிப்பட்டவர் அல்ல, அவர் நல்ல ஒரு மனிதர் என்றும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து பொலிஸ் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது பொலிசார் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

thehushpost

அதாவது, ஒரு கேங்கை சேர்ந்தவர்கள் வேறு யாரோ ஒருவருக்கு பதிலாக, தவறுதலாக Malhiயை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அவர் குற்றப்பின்னணி எதுவும் இல்லாத ஒரு பல்கலைக்கழக மாணவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் அவரை சுட்டவர்கள் யார் என தெரியவில்லை. எனவே பொலிசார், Malhiயை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்