கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த அற்புதம்!

Report Print Balamanuvelan in கனடா

மண வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டதால் பங்களாதேஷிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்று, அங்கிருந்து கனடா வந்த ஒரு பெண், அகதி நிலை கோரி விண்ணப்பித்த போது கொடுத்த போலி ஆவணங்கள், அவரது பிள்ளைகள் நாடு கடத்தப்படும் ஒரு நிலையை உருவாக்கின.

தவறான வழி காட்டுதலால் போலி பெயருடன் அகதி நிலை கோரி விண்ணப்பித்தார் Sabina Sharin Nipa.

ஆனால், Nipaவும் அவரது பிள்ளைகளான Redwan (19)மற்றும் Shuruvi (18) ஆகியோரும் அமெரிக்க பிரஜைகள் என்பதால், அவர்களுக்கு பங்களாதேஷுக்கு செல்வது பிரச்னை என்றால் அமெரிக்கா செல்லலாமே என்று கூறி அகதி நிலை விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது கனடா.

Family handout

எனவே, தங்களை கனேடியர்கள் என்றே எண்ணி ரொரன்றோவில் வாழ்ந்து வந்த Redwanம் Shuruviயும், டிசம்பர் 9 அன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கனடாவை விட்டு வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அரசு சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.

நீதிமன்ற முறையீடுகள் எவையும் நீதிபதிகளை அசைக்கவில்லை. Redwanம் Shuruviயும் ஒன்றும் குழந்தைகள் இல்லை, சட்டம் இரக்கத்தின் அடிப்படையில் முடிவு செய்வதில்லை என்று கூறிவிட்டனர் நீதிபதிகள்.

சரியாக பிள்ளைகள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட 72 மணி நேரம் கூட இல்லாத நிலையில், வழக்கில் தலையிட்டார், அவர்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Erskine-Smith.

© Family handout Shuruvi Mozumder, left, and her mother Sabina Sharin Nipa.

இந்த பிள்ளைகள் என்ன செய்தார்கள், அவர்களை ஏன் இப்படி நடத்துகிறோம் என்று கேட்ட Erskine-Smith, அவர்களுக்கு கனடாவில் வாழ்வதற்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அது படிப்பின் மூலமாகவானாலும் சரி வேலையின் மூலமானாலும் சரி என்றார்.

அத்துடன் நிற்கவில்லை அவர். நேரடியாக அமைச்சரையே சென்று சந்தித்து பிள்ளைகளுக்காக குரல் கொடுத்தார். கடைசியாக, அவரது கடின முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைத்தது.

மறு நாள் காலை, திங்கட்கிழமை பிள்ளைகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று இருந்த நேரத்தில், ஞாயிறு இரவு 10 மணி தாண்டியதும் அவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. Redwanம் Shuruviயும் நாடு கடத்தப்படுவதை ரத்து செய்ய கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி ஒப்புக்கொண்டது என்ற ஆச்சரிய செய்திதான் அது.

Colin Perkel/CP/File MP Nathaniel Erskine-Smith

அதாவது அவர்களது தாயின் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும் வரையில் அவர்கள் நாடு கடத்தப்படப்போவதில்லை.

Erskine-Smithஇன் முயற்சியால் Redwanம் Shuruviயும் இப்போதைக்கு நாடு கடத்தப்படப்போவதில்லை.

நிரந்தரமாக என்று சொல்ல முடியாவிட்டாலும், இரக்கத்தின் அடிப்படையில் வாழிட உரிமை கோரி அவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்வரைக்கும், அல்லது அவர்கள் கனடாவில் நீண்ட காலம் வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் வரையிலாவது அவர்கள் இங்கிருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்கிறார் Erskine-Smith.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்