காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்: நீதிமன்றத்தின் தீர்ப்பால் பதறும் குடும்பம்!

Report Print Balamanuvelan in கனடா

இந்திய வம்சாவளியினர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த நிலையில், காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்தார்.

Jagtar Gill (43) என்னும் அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக Bhupinderpal Gill (40) மற்றும் அவருடன் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருந்த Gurpreet Ronald (37) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். தற்போது, முந்தைய தீர்ப்பில் நீதிபதிகள் தவறு செய்திருப்பதாகக் கூறி, மீண்டும் விசாரணையை துவக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gill family

தங்களுக்கு நியாயம் கிடைத்தாக நிம்மதியாக இருந்த, கொலை செய்யப்பட்ட Jagtar Gillஇன் குடும்பத்தினர் இதனால் பதற்றம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட இருவர் மீதான விசாரணை மீண்டும் துவங்க இருப்பதால், குற்றவாளிகள் தப்ப வாய்ப்புள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் உச்ச நீதிமன்றத்தை நாட Jagtar Gillஇன் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

TONY CALDWELL / POSTMEDIA

Provided by cbc.ca

Ottawa Police Service

POSTMEDIA

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்