பேருந்தில் பயணிக்கும்போது பிரசவ வலியால் துடித்த பெண்: தாதியாக செயல்பட்ட சாரதி!

Report Print Balamanuvelan in கனடா

பேருந்து நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணியில் சேர்ந்த ஒருவர், பேருந்தில் பயணிக்கும்போது பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவருக்கு தாதியாக செயல்பட்ட சம்பவம் ஒன்று கனடாவில் நடந்தேறியுள்ளது.

Red Arrow என்ற நிறுவன பேருந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றும் Shawn Coulter, ஆல்பர்ட்டாவின் Lethbridge பல்கலைக்கழகத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு புறப்படும்போது, திடீரென பயணி ஒருவர், பேருந்தை நிறுத்துங்கள், 911ஐ அழையுங்கள் என்று சத்தமிட்டிருக்கிறார்.

அந்த நபரின் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் சத்தமிட்டதையறிந்த Shawn, உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவசர உதவி எண்ணை அழைத்திருக்கிறார்.

தொலைபேசியில் பேசிய நபர் என்ன நடந்தது என விசாரிக்க, Jen McCallum என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் Shawn.

சரி, உடனடியாக களத்தில் இறங்குங்கள் என அவர் கூற, சாரதியாக பணியில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத Shawn, தாதியாக களமிறங்கியிருக்கிறார்.

அந்த பெண்ணை படுக்க வையுங்கள், அடுத்து என்ன நடக்கிறது என்று கூறுங்கள் என வரிசையாக உத்தரவுகள் வர, Jenஐ பேருந்தின் பின் பக்கத்தில் படுக்கவைத்த Shawn, குழந்தையின் தொப்புள் கொடியும் தலையும் வெளியே வருகின்றன என்று கூறியுள்ளார்.

Red Arrow

சரி உங்களிடம் கத்திரிக்கோல் இருக்கிறதா, நூல் இருக்கிறதா, இல்லையென்றால் பரவாயில்லை ஷூ லேஸ் இருந்தாலும் பரவாயில்லை என அவசர உதவி மையத்திலிருந்தவர் அடுக்கிக்கொண்டே போக, Shawnக்கு பதற்றம் அதிகமாகியிருக்கிறது.

ஆனால், நல்ல வேளையாக, அருகிலுள்ள Lethbridge பல்கலைக்கழகத்திலிருந்து மருத்துவ உதவிக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வந்து சேர்ந்திருகின்றனர்.

வந்தவர்களுக்கு வழி விட்டு விட்டு, பேருந்தில் இருந்த பயணிகளிடம் பிரசவத்திற்கு இடையூறு செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டு, அந்த பெண்ணுக்கு குளிரும் என்று பேருந்தின் வெப்பத்தை அதிகரித்துவிட்டு, ஒரு வழியாக கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார் Shawn.

சற்று நேரத்தில், Jen McCallum அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க, குழந்தையை Shawnஇடம் காட்டியிருக்கிறார்கள்.

அதைப் பார்த்ததும், தானாகவே, எங்கள் பேருந்திற்கு உங்களை வரவேற்கிறேன் என்ற வார்த்தைகள்தான் அவரது வாயில் வந்திருக்கிறது.

பேருந்தின் நினைவாக, குழந்தைக்கு Darius Arrow என பெயரிட முடிவு செய்துள்ளார்கள் அதன் பெற்றோர்.

Red Arrow

இது ஒரு அருமையான நிகழ்வு, அதில் எனது பங்களிப்பும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் Shawn.

Shawn வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தான் ஒரு சாரதி என்பதையும் தாண்டி, அந்த பெண்ணுக்கு தன்னால் ஆன உதவியை செய்து, மறக்க முடியாத சாதனை ஒன்றை படைத்துவிட்டார் என்றே கூறலாம்.

Darren Makowichuk/Postmedia)

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்