கனடாவில் செல்பி எடுக்க தடுமாறிக்கொண்டிருந்த இளம் ஜோடி: உதவிக்கரம் நீட்டிய பிரித்தானிய இளவரசி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் செல்பி எடுக்க தடுமாறிக்கொண்டிருந்த இளம் ஜோடிக்கு ஒரு பெண் உதவிக்கரம் நீட்ட, அவர் ஒரு இளவரசி என்பது தெரியவர, ஆச்சரியத்தில் உறைந்து போனது அந்த ஜோடி.

புத்தாண்டு தினம் அன்று, Iliya Pavlovic, அவரது மனைவி Asymina Kantorowicz, இருவரும் கனடாவின் வான்கூவர் தீவிலுள்ள Horth Hill பூங்காவில் செல்பி எடுக்க தடுமாறிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களிடம், நான் உதவட்டுமா என்று கேட்டிருக்கிறார்.

தம்பதியர் சரி என்று கூற, புன்னகையுடன் மூன்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் அந்த பெண். புகைப்படம் எடுத்து முடித்ததும் பக்கத்தில் திரும்பிப் பார்க்க, அங்கு இளவரசர் ஹரி நின்றிருக்கிறார்.

அப்போதுதான் தங்களை புகைப்படம் எடுத்தது பிரித்தானிய இளவரசி மேகன் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி, இளவரசர் ஹரியை திரும்பிப் பார்க்க, அவர் முகமெல்லாம் புன்னகையுடன், சிவாஜி படத்தில் ரஜினி சொல்கிற மாதிரி, ’கூல்’ என்றிருக்கிறார்.

பின்னர் இரண்டு தம்பதிகளும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி பிரிந்திருக்கிறார்கள்.

மிகவும் எளிமையாக பிரித்தானிய இளவரசி தங்களை அணுகி புகைப்படம் எடுத்துக் கொடுத்ததையும், அவரது கணவர் பிரித்தானிய இளவரசர் ஹரி கூலாக புன்னகைத்தபடி நின்றதையும், இன்னமும் நம்ப முடியவில்லை என்கிறார்கள் Iliyaவும் அவரது மனைவி Asyminaவும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்