எல்லோருமே பதற்றத்தில் இருக்கிறோம்: கனடாவில் வாழும் ஈரானியர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ஈரான் தவிர்த்து அதிகம் ஈரானியர்கள் வாழும் இடங்களில் ஒன்று கனடாவின் ரொரன்றோ. அப்படியிருக்கும் நிலையில், ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்ட விடயம் கனடாவில் வாழும் ஈரானியர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சுக்கு அடுத்தபடியாக, ரொரன்றோவில்தான் ஈரானியர்கள் அதிகம் வாழ்வதால், ரொரன்றோவை டெஹ்ராண்டோ என்று கூட ஈரானியர்கள் அழைப்பதுண்டு.

அங்கு சுமார் 100,000 ஈரானியர்கள் வாழ்கிறார்கள். 1997இல் ரொரன்றோவுக்கு புலம்பெயர்ந்த Mehrdad Ariannejad, எல்லோருமே பதற்றத்தில் இருக்கிறோம் என்கிறார்.

இங்கிருக்கும் ஈரானியர்கள் அனைவரும் மத்திய கிழக்கில் இன்னொரு போர் வெடித்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் அவர்.

ஈரானிலிருக்கும் தங்கள் உறவினர்களைக் குறித்தும் அங்கிருக்கும் அப்பாவி மக்களையும் குறித்தும் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று கூறும் Ariannejad, அதே நேரத்தில் ஈரானில் இந்த ஆட்சி இருக்கும்வரை இப்படிப்பட்ட விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்றும் இங்கிருக்கும் பலர் எண்ணுகிறார்கள் என்கிறார்.

ட்விட்டரில் மூன்றாம் ’உலகப்போர்’ என்னும் விடயம் ட்ரெண்டாகி வரும் நிலையில், ஈரானிலிருக்கும் ஈரானியர்களின் அன்றாட வாழ்வைக் குறித்த கவலைதான் வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்களை வாட்டுகிறது என்கிறார் மற்றொருவர்.

ஏற்கனவே ஈரான் அரசு மக்களை பிடித்து இறுக்கி வைத்திருக்கிறது, அதை இன்னும் இறுக்கமாக்கிவிட்டது அமெரிக்கா என்று கூறும் Alidad Mafinezam, அங்கு இன்னமும் பலர் ஏழ்மையில், மின்சார வசதி இல்லாமல், எரிபொருள் பற்றாக்குறையுடன், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

Paul Borkwood/CBC

ஈரான் தளபதி கொல்லப்பட்டதையடுத்து மூன்றாம் உலகப்போர் வந்துவிடும் என்ற பயமெல்லாம் அவருக்கு இல்லை, அதற்கு பதிலாக, அமெரிக்காவுடன் மோதல் அதிகரிப்பதால் ஈரானியர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிற பயம்தான் அவருக்கு அதிகம் இருக்கிறது.

மற்றொரு பக்கம், இது அவர்களது அராஜகங்களின் முடிவுக்கு ஒரு துவக்கம் என்று கூறும் அவர், சுலைமானின் மரணம் ஈரானில் அரசை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் கூறுகிறார்.

இந்த புரட்சிப் படையின் உறுப்பினர்களை எதிர்த்து நிற்கலாம் என்ற ஊக்கத்தை இந்த சம்பவம் அளிக்கும் என்கிறார் அவர்.

Angelina King/CBC)
Tauseef Mustafa/AFP/Getty Images

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்