கனடாவுக்கு மனைவி பெற்றோரை அழைத்து வர காத்திருந்த இந்தியருக்கு கிடைத்த எதிர்பாராத ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in கனடா

தனது மனைவி மற்றும் பெற்றோரை கனடாவுக்கு தன்னுடன் அழைத்துக்கொள்ள ஓராண்டு காத்திருந்த ஒரு இந்தியருக்கு கடைசி நேரத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலிருக்கும் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் இந்த மாதம் இணையலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த Harmeet Singhக்கு எதிர்பாராமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது கனடா.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு, தனது குடும்பத்தினருக்கான குடும்ப மறு இணைப்பு திட்டத்திற்கான ஆவணங்களை ஒன்லைனில் நிரப்பத் தொடங்கினார் Singh.

27,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக மணி 9.09க்கு தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அவர் தயாராகும்போது, 27,000 விண்ணப்பங்கள் வந்தாயிற்று என்ற செய்தியுடன் இணைய தளம் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டது.

Submitted by Harmeet Singh

ஏமாற்றமடைந்திருந்த Singh, இம்முறையாவது விண்ணப்பித்து விடலாம் என்று காத்திருந்த நேரத்தில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி மற்றொரு அதிர்ச்சி செய்தி அவருக்கு கிடைத்தது.

அது, குடும்ப மறு இணைப்பு திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பதுதான். முன்பு அமுலில் இருந்த, முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்னும் திட்டம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதால், அந்த திட்டத்தை மாற்றிவிட்டு புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்த உள்ளது கனடா அரசு.

Harmeet Singh

அதனால்தான் Singhஆல் தற்போதைக்கு தனது குடும்பத்தை கனடாவுக்கு அழைத்து வர முடியவில்லை.

என்றாலும் மனம் தளர்ந்து போகாத Singh, நீண்ட கால visitor விசாவுக்கு விண்ணப்பித்து தற்காலிகமாகவாவது குடும்பத்தினருடன் இணையும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Submitted by Harmeet Singh

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்