குவாசிம் படுகொலையால் கனடாவில் அமைதியின்மை...! சாலையில் குவிந்த ஈரானியர்கள் செய்த செயலால் பரபரப்பு

Report Print Basu in கனடா

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து கனடாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஈரானியர்கள் அதிகம் வாழும் ரொரன்றோவில் ஈரான் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று ரொரன்றோவில் ஈரானியர்கள் சாலையில் குவிந்தனர்.

ஒரு குழுவினர் சுலைமானி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், மற்றொரு குழுவினர் சுலைமானி கொல்லப்பட்டதை கொண்டாடியும், அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இரண்டு குழுக்களும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ரொரன்றோ பொலிசார் தலையிட்டு விலக்கிவிட்டனர். இல்லையெனில் மோதல் வன்முறையாக மாறியிருக்கும்.

இதனையடுத்து, ஒருவருக்கொருவர் எதிராக கோஷமிட்டனர். மேலும், சுலைமானி கொலையை கொண்டாடும் அமெரிக்கா கொடியுடன் குழு பாட்டு பாடி நடனமாடினர்.

ஈரானியர்களிடையே ஏன் இந்த வேறுபாடு இருக்கிறது என்பது குறித்து விளக்கிய மனித உரிமைகள் ஆர்வலர் கூறியதாவது, ஈரான் அரசின் சித்தாந்தத்தை குறித்து நாம் பார்க்க வேண்டும்.

தளபதி சுலைமானி ஈரானுக்காகவும், அதன் பிராந்திய கொள்கைக்காகவும் பல மக்களை கொன்று குவித்தவர். பிராந்திய கொள்கைக்காக கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமுடையவர்கள் சுலைமானிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்