கனடாவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு கர்ப்பிணிப்பெண்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

குடியுரிமை பெறுவதற்காக கனடாவை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு கர்ப்பிணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா மருத்துவத்துறையிலிருந்து, குறிப்பாக நர்ஸ்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளில், வெளிநாட்டைச் சேர்ந்த பெண்கள் பிரசவிக்கும்போது, தாமாகவே அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாகிவிடும் வகையில் சட்டம் உள்ளது. அப்படிப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று.

எனவே, பல வெளிநாட்டு கர்ப்பிணிப்பெண்கள் பிரசவிக்கும் காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Richmond மருத்துவமனையில், 2014இலிருந்து இரண்டு மருத்துவர்கள் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு பிறந்த 2,206 குழந்தைகளில் 1,300 குழந்தைகளை பிரசவிக்க உதவியுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி வெளிநாட்டவர்களின் குழந்தைகள் மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளதால், நர்ஸ்களால் தங்கள் சொந்த நாடான கனடா மக்களை கவனிக்க முடியாமல் போவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மக்களுக்கு உதவமுடியாமல் வெளிநாட்டு மக்களுக்கு தங்கள் சேவை செலவிடப்படுவது நியாயமற்றது என அவர்கள் கருதுகிறார்கள். இது போக, அப்படி குழந்தை பெற வரும் வெளிநாட்டவர்கள் பலர் மருத்துவமனை கட்டணம் செலுத்துவதும் இல்லையாம்.

வான்கூவர் சுகாதாரத்துறையின் ஆவணங்களின்படி, இப்படி செலுத்தாமல் விடப்பட்ட கட்டணம் 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாம்.

எனவே கனடா மருத்துவத்துறைக்கு இப்படிப்பட்ட வெளிநாட்டவர்களால் அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் உடனே கனடாவில் குடியேற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம்.

குழந்தைகள் வளர்ந்தபின், அவர்கள் கனடாவுக்கு புலம்பெயரக் கோரி விண்ணப்பிக்கிறார்களாம்!

எனவே, இந்த பிரசவத்தை அவர்கள் கனடாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்