மத்திய கிழக்கில் போர் மூளும் அபயாம்..! கனடா உயர் இராணுவ அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கனடா

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈராக்கில் உள்ள படைகளை திரும்பப் பெறுவதாக கனடா அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதை அடுத்து, வாஷிங்டனுக்கும் தெஹரானுக்கும் இடையிலான நெருக்கடி கடுமையாக அதிகரித்துள்ளது.

பாக்தாத்தில் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து வெளிநாட்டு படைகளையும் வெளியேற்ற ஈராக் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள கனடாவின் 500 இராணுவ வீரர்களில் சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக குவைத்துக்கு மாற்றப்படுவார்கள் என்று நாட்டின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாட்களில், மோதல் மற்றும் நேட்டோ திட்டத்தின் விளைவாக, எங்கள் வீரர்களில் சிலர் தற்காலிகமாக ஈராக்கிலிருந்து குவைத்துக்கு மாற்றப்படுவார்கள் என்று ட்விட்டரில் வெளியிட்டு, இராணுவ குடும்பங்களுக்கு எழுதிய கடிதத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஜோனாதன் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் இதைச் செய்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனி உள்ளிட்ட பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் செவ்வாயன்று ஈராக்கிலிருந்து சில படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்