டிக்கெட் குளறுபடியால் உக்ரைன் விமான விபத்தில் உயிர் தப்பிய கணவன்: மனைவிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்!

Report Print Balamanuvelan in கனடா

கனேடியர் ஒருவரது டிக்கெட் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டதால், தான் விமானம் ஏறாமல் தன் மனைவியை மட்டும் விமானம் ஏற்றி அனுப்பி வைத்தநிலையில், மனைவி பலியாக, கணவன் உயிர் தப்பியுள்ளார்.

Mohsen Ahmadipourம் (43) அவரது மனைவி Roja Azadianம் ஈரானிலிருக்கும் தங்கள் உறவினர்களை சந்தித்துவிட்டு கனடாவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், டெஹ்ரான் விமான நிலையம் வந்தடைந்தபோது, Ahmadipourஇன் டிக்கெட் செல்லுபடியாகாது என கூறப்பட்டுள்ளது.

உடனே, Rojaவை அந்த விமானத்தில் ஏற்றிவிட்டுவிட்டு, தான் மற்றொரு விமானத்தைப் பிடித்து, முடிந்தவரையில் சீக்கிரம் கனடா வந்து சேர்ந்துவிடுவதாக கூறியுள்ளார் Ahmadipour.

Roja விமானம் ஏற, Ahmadipour விமான நிலையத்திலேயே இருந்துள்ளார். விமானம் புறப்பட்டிருக்கிறது.

சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகிவிட்டது. விமான நிலையத்தில் காத்திருக்கும் Ahmadipourக்கு, தன் மனைவி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 15குழந்தைகள் உட்பட, 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள் 11 உக்ரைனியர்கள், 10 சுவீடன் நாட்டவர்கள், 4 ஆப்கனியர்கள், 3 ஜேர்மானியர்கள் மற்றும் 3 பிரித்தானியர்கள் என மொத்தம் 176 பேர் பலியாகிவிட்டதாக செய்தி கிடைத்துள்ளது.

விமானத்தில் ஏறாத அவர் அதிர்ஷ்டசாலி என மக்கள் Ahmadipourஐ பாராட்டும் நிலையில், அவரோ தன் அன்பு மனைவியை பறிகொடுத்துவிட்டோமே என கண்ணீர் வடிக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...