பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க விரும்பும் கனேடியர்கள்: ஆனால் செலவிட விருப்பமில்லையாம்!

Report Print Balamanuvelan in கனடா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கனடாவுக்கு குடிபெயர இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவர்களுக்கு நாட்டில் முக்கிய பொறுப்பு கொடுக்க கனேடியர்கள் தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், பிரித்தானிய இளவரசர் ஹரி கனடாவில் குடியமரும் பட்சத்தில், கனேடியர்கள் அவருக்கு கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரல் பதவி கொடுக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.

61 சதவிகிதம் கனேடியர்கள், இளவரசர் ஹரியை காமன்வெல்த் தேசத்திற்கான பிரித்தானிய மகாராணியாரின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பை துறந்து, கனடாவுக்கு குடிபெயர இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கனேடிய மக்கள் இவ்விதம் வாக்களித்துள்ளார்கள்.

என்றாலும், இதில் கனேடியர்கள் அனைவருக்குமே உடன்பாடில்லை. ஹரியும் மேகனும் அதிக நேரத்தை வட அமெரிக்காவிலும் செலவிட இருப்பதாக அறிவித்துள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பு செலவுகள் கனடா மக்கள் தலையில் விழுந்துவிடுமோ என அவர்கள் அஞ்சுவதால், சிலர் அவர்கள் கனடாவில் குடியமர்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்