கனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிசார் அறிவித்த நிலையில் அவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொரன்ரோ பொலிசார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், Roseabella Hazel Hoostie என்ற 15 வயது சிறுமி 17ஆம் திகதியில் இருந்து மாயமானதாக தெரிவித்தனர்.

அவர் கடைசியாக Steeles Avenue East & Maxome Avenue பகுதியில் 17ஆம் திகதி மாலை 3 மணிக்கு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதோடு Roseabella Hazel Hoostie காணாமல் போன அன்று அணிந்திருந்த உடைகள் குறித்தும் அவரின் எடை மற்றும் உயரம் தொடர்பிலும் பொலிசார் தகவல் வெளியிட்டனர்.

இந்த சூழலில் சிறுமி Roseabella Hazel Hoostie பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்