மனைவி மற்றும் மகனுடன் புதிய வாழ்க்கையை துவங்க கனடாவிற்கு பறந்த ஹரி

Report Print Vijay Amburore in கனடா

அரச குடும்பத்திலிருந்து பிரிந்த ஹரி, மனைவி மற்றும் மகனுடன் புதிய வாழ்க்கையை துவங்குவதற்கான கனடாவிற்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அரச கடமைகளில் இருந்து விலகுவதாக ஹரி மற்றும் மேகன், அதிர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டனர். மேலும், தங்களுடைய பெரும்பாலான நேரத்தை கனடா மற்றும் வடஅமெரிக்காவில் செலவிட இருப்பதாகவும் கூறினர்.

ராணி உட்பட அரச குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் முன்னமே தெரிவிக்காமல், திடீரென அறிவிப்பினை வெளியிட்டதால், அரண்மனை வட்டாரமே பரபரப்பாக காணப்பட்டது. அப்படி இருந்தும் கூட, அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாக ராணி நேற்றைக்கு முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.

பிரித்தானியா தனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றும், அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியும் தனக்கு தெரியவில்லை என, 2006 ஆம் ஆண்டில் ஹரி நிறுவிய சென்டபேல் என்ற தொண்டு நிறுவனத்திற்கான விருந்தில் உருக்கமாக பேசினார்.

இந்த நிலையில், அவர் தனது மனைவி மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை துவங்குவதற்கான கனடாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers