புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! எங்களை பின் தொடராதீர்கள்... ஹரி கடும் எச்சரிக்கை

Report Print Raju Raju in கனடா

தங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் இளவரசராக இருந்த ஹரியும், அவர் மனைவி மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து கனடாவுக்கு இருவரும் சென்று தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு ஹரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருவரும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர்.

ஹரி தொடர்பான புதிய புகைப்படங்கள் பிரித்தானிய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்டதாக ஹரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers