ஒன்றாறியோவில் 3 நாட்களாக காணாமல் போன 13 வயது சிறுமி! பொதுமக்கள் உதவியை நாடிய பொலிசார்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 13 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள ரொரன்ரோ நகர் பொலிசார் சமூகவலைதளமான டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், Rojil Yokit என்ற 13 வயது சிறுமி கடந்த 22ஆம் திகதி காலை 8 மணி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி Rojil Yokit கடைசியாக Martin Grove Rd & The Westway area பகுதியில் காணப்பட்டுள்ளார்.

4 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட Rojil Yokit,ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன அன்று பச்சை நிற மேலாடையும், சாம்பல் நிற ஜீன்ஸ் பேண்டும் அவர் அணிந்திருந்தார்.

சிறுமி Rojil Yokit குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்