பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் தங்கியிருக்கும் தீவில் நிலநடுக்கம்!

Report Print Balamanuvelan in கனடா
253Shares

பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில் தன் மனைவி மகனுடன் தங்கியிருக்கும் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கம், உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு ஏற்பட்டதாம்.

நிலநடுக்கத்தால் இதுவரை பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அத்துடன் சுனாமி அபாயமும் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹரியும் மேகனும் வான்கூவர் தீவிலுள்ள, 14 மில்லியன் டொலர் மதிப்புடைய மாளிகை ஒன்றில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்