கனடாவை விட்டு புறப்படுகிறார்களா இளவரசர் ஹரியும் மேகனும்?: எல்லாம் டிரம்ப் கையில்தான் இருக்கிறதாம்!

Report Print Balamanuvelan in கனடா

பிரித்தானியாவிலிருந்து வெளியேறி கனடாவுக்கு சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும், அங்கும் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஹரியும் மேகனும் கனடா சென்று குடியேறியுள்ள நிலையில், மீண்டும் வேறு ஒரு நாட்டுக்கு இடம்பெயர்வதற்கான யோசனையிலிருக்கிறார்களாம்.

தற்போது அவர்கள் கனடாவில் வாழும் வான்கூவர் மிகவும் அமைதியாகவும், தொலைவாகவும் இருப்பதால் இந்த யோசனையை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களுடைய அடுத்த இலக்கு, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சாம்.

Image: GETTY

ஆனால், அது அடுத்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்ததாம்.

ட்ரம்ப் அடுத்த முறை அதிபர் பதவிக்கு போட்டியிடப்போகிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் அமெரிக்க செல்வதா இல்லை வேறெங்கும் செல்வதா என முடிவெடுக்க இருக்கிறார்களாம் ஹரி மேகன் தம்பதியர்.

Image: GETTY

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...