ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வர பெண்! 12 நாட்களில் கணவரை பிரிந்தார்... காரணம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

நடிகையும் கனடாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் திருமணம் செய்து கொண்ட 12 நாட்களில் கணவரை பிரிந்துள்ளார்.

பமீலா ஆண்டர்சனின் நிகர சொத்து மதிப்பு $12 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நான்கு முறை திருமணமானவர்.

இவர் நான்காவதாக ரிக் சாலமன் என்பவரை 2014ல் மணந்து 2015ல் அவரை பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் ஜான் பீட்டர்ஸைத் பமீலா கடந்த 20ஆம் திகதி ஐந்தாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணச் சலசலப்பு முடியும் முன்னரே, அதாவது 12 நாட்களில், தம்பதியின் திருமண முறிவு செய்தியை ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று இவர்கள் பிரிந்த செய்தியை ஹாலிவுட் ரிப்போர்ட்டர் வெளிப்படுத்தியது, இந்த ஜோடி தங்கள் "உறவை முடித்துக் கொள்ள" முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.

என்னுடன் மீண்டும் இணைவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார் என்று மகிழ்ந்தேன். இந்த உறவில் என்ன தேவை என்பது குறித்து நாங்கள் பரீலிக்க சில காலம் ஆகலாம், உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர்களிடம் பமீலா ஆண்டர்சன் கூறினார்.

மேலும் வாழ்க்கை ஒரு பயணம், அன்பு என்பது ஒரு அசைக்க முடியாத சக்தி. இந்த உலகளாவிய உண்மையை மனதில் கொண்டு, எங்கள் திருமணத்தை வெறும் சடங்காக இல்லாமல் ஒருவர் மீது மற்றவர் அளிக்கும் மதிப்பின் பேரில் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்