பிரித்தானியா உடனான உறவை முறிக்க கனேடியர்கள் ஆதரவு.! இளவரசர் ஹரி-மேகனையும் புறகணித்து அதிரடி

Report Print Basu in கனடா

கனடாவில் குடியேறிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் பாதுகாப்புக்காக தங்கள் நாடு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று கனேடியர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகின்றனர்.

கனடா பாராளுமன்ற முடியாட்சி நாடு மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணி நாட்டின் ஆளும் தலைவராகவும் இருக்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

சிடிவி-க்காக நானோஸ் ரிசர்ச் ஆய்வு செய்ததில் 77 சதவிகித மக்கள், கனடாவில் வரி செலுத்துவோர் இளவரசர் ஹரி-மேகன் ஆகியோருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் கனடாவில் பிரித்தானியா ராணியின் பிரதிநிதிகளாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர். 19 சதவீத கனேடியர்கள் மட்டுமே ஹரி-மேகன் பாதுகாப்புச் செலவுகளில் கனடா பங்கெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கான பாதுகாப்பு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுகுறித்து கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக மட்டுமே கனேடிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 32 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா அரச குடும்பத்தினருடனும், அரசியலமைப்பு முடியாட்சியாக அவர்களின் நாட்டின் அந்தஸ்துடனும் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

28 சதவிகிதத்தினர் அந்த விருப்பத்தை ஓரளவு மட்டுமே ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். 35 சதவிகிதம் கனேடியர்கள் பிரித்தானியா உடனான தொடர்புகளை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1,003 கனேடியர்களிடம் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 3.1 சதவிகித பேர் தவறுதலாக பதில் அளித்துள்ளனர்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி-மேகன் தம்பதி தற்போது வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...