துர்நாற்றம் வீசும் பயணி மீது புகாரளியுங்கள்... வெளிப்படையாக பயணியை அவமதித்த ரயில்வே ஊழியர்: ஒரு சர்ச்சை வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ரயிலில் பயணித்த ஒரு பயணி மீது துர்நாற்றம் வீசுவதால், சக பயணிகள் அனைவரும் சேர்ந்து அவர் மீது புகாரளிக்குமாறு வெளிப்படையாக ரயில்வே ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை அவமதிக்கும் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரொரன்றோவில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளுக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ஒன்று அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’இந்த பெட்டியில் மிக மோசமாக துர்நாற்றமடிக்கும் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார், அவர் ரயிலிலிருந்து இறங்க மறுக்கிறார்.

உங்களுக்கு அந்த நாற்றம் பிடிக்கவில்லையென்றால், ரயில்வே துறையை அழைத்து புகார் செய்யுங்கள்.

இப்படி செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்’ என்று கூறியது ஒலிப்பெருக்கியில் ஒலித்த அந்த குரல்.

இந்த விடயத்தை வீடியோவாக பதிவு செய்த பயணியாகிய Dylan Ungerman Sears என்ற பெண்மணி, அதை ட்விட்டரில் வெளியிட்டு, தான் அந்த ஒலிப்பெருக்கி செய்தியைக் கேட்டு கடுமையான அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கிறார்.

எல்லா பயணிகளுக்கும் சமமாக கொடுக்கப்படவேண்டிய மனித நேயம், மரியாதை அடிப்படை மனித நாகரீகம் எல்லாம் எங்கே போயிற்று என்று கேள்வி எழுப்புகிறார் Dylan.

அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்