கழுத்தில் ஆப்ரேஷன்! அதிக பணம் தேவை... கனடாவில் கவலைக்கிடமாக உள்ள தமிழ் மாணவியின் தற்போதைய நிலை

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி சூடு காயத்தால் மருத்துவமனையில் உள்ள தமிழக மாணவியின் உடல் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் புரூக்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஆல்பர்ட், ஜென்ட் தம்பதியரின் மகள் ரேச்சல் (23).

இவர் கனடாவில் உள்ள ரொரன்ரோ நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் உயர் கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி மர்ம நபர் ஒருவர் ரேச்சலை கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டு விட்டும் தப்பியோடினார்.

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு வாரங்கள் கடந்தும் அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார் எனவும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையில் கனடாவுக்கு செல்லவுள்ள ரேச்சலின் குடும்பத்தார் நிதி வசூலித்து வருகின்றனர்.

இது குறித்து ரேச்சலின் தந்தை ஆல்பர்ட் கூறுகையில், இன்னும் என் மகள் அவசர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார்.

அவளுக்கு கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

சிகிச்சைக்கு ரேச்சல் நன்கு ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் ரொரன்ரோவுக்கு செல்லவுள்ளோம், பயண செலவுக்கான பணம் கிடைத்துவிட்டாலும், அங்கு ஆறு மாதமாவது தங்க வேண்டியிருக்கும்.

அங்கு ரேச்சலை கவனித்து கொள்ள பணம் தேவைப்படுகிறது, அதற்காக நிதி வசூலித்து வருகிறோம்.

காயங்கள் பெரியளவில் உள்ளதால் அது குணமாவதற்கு தாமதம் ஆகும் என கூறியுள்ளார்.

இதனிடையில் ரேச்சல் மீது தாக்குதல் நடத்திய 20களில் உள்ள ஆசிய இளைஞன் இன்னும் சிக்காத நிலையில் பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers