புதரிலிருந்து கேட்ட குழந்தையின் அலறல்: விரைந்து வந்த பொலிசார் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ஒட்டாவாவில் மாலைப்பொழுதில் புதர் ஒன்றிலிருந்து குழந்தை ஒன்றின் அலறல் கேட்பதாக பொலிசாருக்கு ஒருவர் தகவலளித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் தேடியபோது அந்த பகுதியில் யாரையும் காணவில்லை.

அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என பொலிசார் விசாரிக்க, அந்த வீட்டிலிருந்த பெண் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பியபோது, தனது வீட்டினருகே பொலிசார் இருப்பதைக் கண்டு என்ன நடந்ததென்று விசாரித்திருக்கிறார்.

பொலிசார் விடயத்தை விவரிக்க, நடந்ததைக் கேட்ட அந்த நபர், பொலிசாரிடம் ஒரு வேடிக்கையான விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனது ஆடு வேலி ஒன்றில் சிக்கிக்கொண்டதாகவும், அப்போதிலிருந்து அது குரலெழுப்பிய வண்ணம் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் சத்தம் குழந்தைகள் அலறுவது போலவே இருக்கும் என்று கூறிய அவர், பொலிசாரை அழைத்துச் சென்று எந்த இடத்தில் ஆடு சிக்கியிருந்தது என்பதைக் காட்டியுள்ளார்.

அதே இடத்தில்தான் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டதாக பொலிசாரை அழைத்த நபரும் உறுதி செய்ய, தாங்கள் ஏமாந்து போயிருந்தாலும், யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்து பொலிசார் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers